Kalidass Venugopal
31-ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி திருவிழா

நிகழ்வு

Read in English

31-ஆம் ஆண்டு ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி திருவிழா

11 நாட்களில் தொடங்குகிறது
தேதிகள்
14 September 2026 – 20 September 2026
இடம்
சேகர் நகர், நியூ காலனி, மேற்கு ஜோன்ஸ் சாலை சந்திப்பு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை
ஏற்பாடு
இந்து முன்னணி — அமைப்பாளர் வே. காளிதாஸ் வேணுகோபால்

31-ஆம் ஆண்டாக நடைபெறும் இந்த விநாயகர் சதுர்த்தி திருவிழா, சுதந்திரப் போராட்ட காலத்தில் பொதுமக்கள் மத்தியில் விநாயகர் சதுர்த்தியை பொது இடங்களில் கொண்டாடும் மரபை தொடங்கி வைத்த பாலகங்காதர திலகரின் பாரம்பரியத்தைத் தொடர்கிறது. இந்து முன்னணியின் நிறுவனத் தலைவர் வீரத்திருவி இராம.கோபாலன் அவர்கள் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த மரபை பட்டிதொட்டியெங்கும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பெரிய இயக்கமாக வளர்த்தார். இவ்வாண்டு அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, இத்திருவிழா சிறப்பு முக்கியத்துவத்துடன் கொண்டாடப்படுகிறது.

மேற்கு சைதாப்பேட்டை பகுதிக்காக வே. காளிதாஸ் வேணுகோபால் அவர்களால் ஏற்பாடு செய்யப்படும் இந்த திருவிழா, ஒவ்வொரு நாளும் தனித்தனி கருப்பொருள், கலை நிகழ்ச்சி, சிறப்பு விருந்தினர்களுடன் ஒரு முழு வாரம் நடைபெறுகிறது.

நிகழ்ச்சிக்கு உறுதுணையாக: VKMR Finance மற்றும் FB Cakes.

Sept14

திங்கட்கிழமை

குழந்தைகள் தினம்

  • மாலை 4.00ஓவியப் போட்டி
  • மாலை 6.00வில்லுப்பாட்டு, தென்காசி செல்வி M. மாதவி

சிறப்பு விருந்தினர்கள்

நயினார் நாகேந்திரன்

Ex.MLA., மாநில தலைவர் – பா.ஜ.க. தமிழ்நாடு

தமிழிசை சௌந்தரராஜன்

முன்னாள் ஆளுநர் – புதுச்சேரி மற்றும் தெலுங்கானா

ஜி.கே. வாசன்

Ex.MP., தலைவர் – தமிழ் மாநில காங்கிரஸ்

பிரேமலதா விஜய்காந்த்

MLA., பொதுச் செயலாளர் – தே.மு.தி.க.; விருத்தாசலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

A.C. சண்முகம்

Ex.MP., Ex.MLA.; நிறுவனர்-தலைவர், டாக்டர் எம்.ஜி.ஆர். கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம்

Sept15

செவ்வாய்க்கிழமை

உலக ஒற்றுமை தினம்

  • மாலை 6.00பக்திப் பாடல்கள், பக்தி மாமணி டிவி புகழ் சாஸ்தா தாசன்

சிறப்பு விருந்தினர்கள்

பாரி வேந்தர்

Ex.MP., வேந்தர் – எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம்

நாசே. இராமச்சந்திரன்

வேந்தர் – A.M.E.T. பல்கலைக்கழகம்

ம. அருள்பிரகாசம்

MLA., சைதாப்பேட்டை தொகுதி; செ.தெ.மா.செயலாளர் – தமிழக வெற்றிக் கழகம்

ஏர்போர்ட் மூர்த்தி

நிறுவனத் தலைவர் – புரட்சி தமிழகம்

ப. சுப்பிரமணி

MC., தெ.செ.மா.செ – ம.தி.மு.க.

Sept16

புதன்கிழமை

போதை ஒழிப்பு தினம்

  • மாலை 6.00பக்திப் பாடல்கள், விஜய் டிவி புகழ் சீர்காழி அருணா & அகிலா சகோதரிகள்

சிறப்பு விருந்தினர்கள்

T.T.V. தினகரன்

Ex.MLA., பொதுச் செயலாளர் – அ.ம.மு.க.

H. ராஜா

Ex.MLA., தேசிய செயற்குழு உறுப்பினர் – பா.ஜ.க.

S.R. சேகர்

மாநில பொருளாளர் – தமிழ்நாடு பா.ஜ.க.

S.S. பாலாஜி

Ex.MLA., மாநில பொருளாளர் – வி.சி.க.

ஜசரி கே. கணேஷ்

வேந்தர் – வேல்ஸ் பல்கலைக்கழகம்

Sept17

வியாழக்கிழமை

சகோதரத்துவ தினம்

  • மாலை 6.00பக்தி இன்னிசைத் திருவிழா, விஜய் டிவி புகழ் சூப்பர் சிங்கர் முத்து சிற்பி

சிறப்பு விருந்தினர்கள்

L. முருகன்

மாண்புமிகு., Ex.MP., மத்திய இணையமைச்சர் – நாடாளுமன்ற விவகாரம் மற்றும் தகவல் தொழில்நுட்பம்

அக்ரி S. கிருஷ்ணமூர்த்தி

MLA., கலசபாக்கம் தொகுதி & சட்டமன்ற கொறடா; திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளர் – அ.தி.மு.க

ஆண்டாள் P. சொக்கலிங்கம்

வட தமிழக தலைவர் – விசுவ ஹிந்து பரிஷத்

தேவராஜ்

நிறுவனத் தலைவர் – வேளாங்கண்ணி கல்விக் குழுமங்கள்

ஷெல்வி

பிரபல ஜோதிடர்

Sept18

வெள்ளிக்கிழமை

மகளிர் தினம்

  • மாலை 6.00திருவிளக்கு பூஜை, ஆசியுரை: சுவாமி விநயாமிர்தா
  • இரவு 8.00செஞ்சி பார்த்திபன் வழங்கும் "அர்ஜீனன் தபசு" தெருக்கூத்து நாடகம்

சிறப்பு விருந்தினர்கள்

சுவாமி விநயாமிர்தா

பூஜ்ய., மாதா அமிர்தானந்தமயி மடம், சென்னை

பொன். ராதாகிருஷ்ணன்

Ex.MP., முன்னாள் மத்திய இணையமைச்சர்

சௌமியா அன்புமணி

MLA., தர்மபுரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்

சாய் பிரகாஷ் லியோமுத்து

தலைவர் – சாய்ராம் கல்வி குழுமம்

T.K. ராஜேந்திரன்

முன்னாள் காவல்துறை இயக்குநர் – தமிழ்நாடு

Sept19

சனிக்கிழமை

சுற்றுச்சூழல் தினம்

  • மாலை 4.00தூய்மைப் பணியாளர்களை கௌரவித்தல்
  • இரவு 8.00செஞ்சி பார்த்திபன் வழங்கும் "கர்ண மோட்சம்" தெருக்கூத்து

சிறப்பு விருந்தினர்கள்

கேசவ விநாயகன்

தென்பாரத பொறுப்பாளர் – சமுதாய நல்லிணக்கம், RSS

க. பக்தவத்சலம்

தென்பாரத அமைப்பாளர் – இந்து முன்னணி

மு. மகேஷ்குமார்

MC., துணை மேயர் – பெருநகர சென்னை மாநகராட்சி

மாலா

நிறுவனர் – தாகூர் கல்விக் குழுமங்கள்

மணிகண்டன்

செயலாளர் – தாகூர் கல்விக் குழுமங்கள்

எம். கிருஷ்ணமூர்த்தி

MC., 10வது மண்டலம் குழுத் தலைவர்; சைதை மேற்கு பகுதி செயலாளர் – தி.மு.க.

வழக்கறிஞர் எம். ஸ்ரீதரன்

MC., தலைமை பொதுக்குழு உறுப்பினர் – தி.மு.க.

S. குணசேகரன்

அவைத் தலைவர் – சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க

சி.கே. பெருமாள்

மாநில பொதுச்செயலாளர் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

Sept20

ஞாயிற்றுக்கிழமை

விசர்ஜனம்

  • காலை 10.00ஊர்வலத்தை துவக்கி வைப்பவர்: ம. வெங்கடேசன்

சிறப்பு விருந்தினர்கள்

ம. வெங்கடேசன்

அகில இந்திய செயலாளர் – பா.ஜ.க.

← நிகழ்வுகளுக்குத் திரும்ப